தாமரைக்கு சவாலான தென்னிந்தியா தேர்தல் கருத்து கணிப்பு சொல்வது என்ன..?
மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல்
10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் பிரதமர் மோடி - பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்திட பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதில், தென்னிந்தியாவில் பாஜகவிற்கு பெரும் வெற்றி இருக்காது என அரசியல் வல்லுநர்கள் பேசி வரும் நிலையில்,அதனை தலைகீழாக மாற்றியுள்ளது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு.
தென் இந்தியா - தமிழ்நாடு,கேரளா,ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியை உள்ளடக்கியது. இதில் தமிழ்நாட்டில் 39, கேரளாவில் 20, ஆந்திர பிரதேசத்தில் 25, தெலுங்கானா 17, கர்நாடகாவில் 28 மற்றும் பாண்டிச்சேரியில் 1 இடம் உள்ளது.
தமிழ்நாடு - பாண்டிச்சேரி
தனியார் தொலைக்காட்சி தரப்பில் வெளியிப்பட்டுள்ள கருத்து கணிப்பு முடிவில், திமுக ஆளும் தமிழகத்தில் இந்தியா கூட்டணி 30 இடங்களிலும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 5 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் மொத்தமுள்ள 39 இடங்களில் வெற்றி பெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதில், திமுக 20 இடங்களிலும், அதிமுக மற்றும் பாஜக தலா 4 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் இருக்கும் ஒரே ஒரு லோக்சபா தொகுதி, பாஜக;விற்கு செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா - தெலுங்கானா
ஆந்திர மாநிலத்தில் மொத்தமிருக்கும் 25 இடங்களில் மாநிலத்தில் ஆட்சி செய்யும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 15 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெறலாம் என கருத்துக் கணிப்பு கூறுகிறது.
காங்கிரஸ் ஆளும் தெலங்கானாவில் காங்கிரஸ் ஒன்பது இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) இரண்டு இடங்களிலும், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் ஒரு இடத்திலும் மட்டுமே வெற்றி பெறக்கூடும் என கருத்து கணிப்பு கூறுகிறது.
கர்நாடகா
காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில் பாஜக 22 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான ஜனதா தளம் (எஸ்) 2 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றி பெறலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
கேரளா
இடதுசாரிகள் ஆளும் கேரளாவில், மொத்தமுள்ள 20 இடங்களில் இந்தியா கூட்டணி 17 இடங்களையும், பாஜக மீதமுள்ள மூன்றையும் வெல்லலாம். காங்கிரஸ் தலைமையிலான UDF(United Democratic Front) 11 இடங்களிலும், சிபிஐ(எம்) தலைமையிலான LDF(Left Democratic Front) 6 இடங்களிலும் வெற்றிபெறலாம் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.
இங்கு பாஜவிற்கு இடமே கிடைக்காது என கணக்கிடப்பட்டுள்ளது.
மொத்தமாக இருக்கும் தொகுதிகளை இணைத்தால், இந்தியா கூட்டணி 60 இடங்களையும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 38 இடங்களையும் என கணக்கிடப்பட்டுள்ளது.