ஆட்டோவை வீடாக மாற்றிய தமிழக இளைஞரை தேடும் தொழிலதிபர்.!
அசாத்தியமான விஷயங்களும் சாத்தியப்படும் நிகழ்வுகள் தினம்தோறும் நம்மைச் சுற்றி நடந்து கொண்டு தான் இருக்கின்றன. வெகு அரிதாக இந்த மாதிரியான விஷயங்கள் ஊடக வெளிச்சம் பெறுகின்றன. அவ்வாறு தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் ஆட்டோவை வீடாக வடிவமைத்து பலரின் கவனத்தையும் பெற்றிருந்தார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த அருண்பிரபு என்பவர் தான் ஆட்டோவை வீடு போலவே வடிவமைத்திருந்தார். சமையலறை, குளியலறை, படுக்கையறை போன்றவற்றோடு, சூரியமின் உற்பத்தி சாதனமும் அந்த ஆட்டோ வீட்டில் இடம்பெற்றிருந்தது.
தற்போது மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இதனை பாராட்டியுள்ளார். மேலும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”அருண்பிரபுவின் கற்பனை திறனை பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று வியந்துள்ள அவர், தங்களது நிறுவனத்தின் பொலீரோ பிக்கப் வாகனத்தை இவ்வாறு மாற்றி வடிவமைக்க அருண்பிரபு முன்வருவாரா என்று கேட்டுள்ளார். அவரை தொடர்பு கொள்ள யாரேனும் உதவ முடியுமா”