ஜார்ஜியாவிற்கு சென்ற நடிகர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு! புகைப்படங்கள் ட்ரெண்டிங்!
‘விஜய் 65’ படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்ற நடிகர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 6ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், சினிமா நட்சத்திரங்களும், வாக்காளர்களும் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் சைக்கிளில் வந்தது சர்ச்சையாக வெடித்தது. நடிகர் விஜய் ஏன் சைக்கிளில் வந்தார். ஒருவேளை பெட்ரோல்-டீசல் விலையை சுட்டிக்காட்டுவதற்காக இப்படி வந்தாரா என்று ஒரு தரப்பினரும், நடிகர் விஜய் சைக்கிள் கருப்பு, சிவப்பு உள்ளது, ஒருவேளை திமுகவுக்கு ஆதரவாக மறைமுகமாக வாக்களிக்க சொல்கிறாரா என்று இன்னொரு தரப்பினரும் சர்ச்சையை கிளப்பிவிட, ரசிகர்கள் விஜய் ஓட்டி வந்த சைக்கிள் நிறுவனம் என்ன? இந்த சைக்கிள் எவ்வளவு விலை இருந்தாலும் வாங்கிடலாம் என்று முண்டியடித்துக் கொண்டு புக் செய்த ரசிகர்களும் இப்படியாக அன்றைய தினம் இந்திய அளவில் நடிகர் விஜய் சைக்கிள் பயணம் தான் ட்ரெண்டானாது.
இது பற்றி ஏதாவது நடிகர் விஜய் விளக்கம் அளிப்பாரா என்று எதிர்பார்த்திருந்த சமயத்தில், எதுவும் பேசாமல் ‘விஜய் 65’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியாவிற்கு விமானம் மூலம் பறந்து சென்றார் நடிகர் விஜய்.

'மாஸ்டர்' பட வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பட பூஜை கடந்த வாரம் நடைபெற்றது. ‘விஜய் 65’ படக்குழுவினர், ஏற்கெனவே அங்கு சென்று அரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா செல்லவிருக்கிறார்.
ஜார்ஜியா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் விஜய்க்கு பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.