வென்டிலேட்டர் உதவியுடன் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை : மருத்துவமனை நிர்வாகம் தகவல்
செந்தில்பலாஜிக்கு தற்போது வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமைச்சருக்கு சிகிச்சை
சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கி சுமார் 5 மணி நேரமாக நடந்து இருதய அறுவை சிகிச்சை நிறைவு பெற்றது. இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாக ஏற்கனவே மருத்துவக்குழு பரிந்துரை செய்திருந்த நிலையில், நேற்று அதன்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
வெண்டிலேட்டர் சிகிச்சை
இந்த நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி 24 நேரமாக சிகிச்சையில் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சை நடைபெற்ற 24 மணி நேரத்துக்கு இதயத்துக்கு ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரத்துக்கு பிறகு செயற்கை சுவாசம் முழுவதுமாக நீக்கப்பட்டு இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார் என்றும் செந்தில் பாலாஜியின் ரத்த ஆக்சிஜன் அளவு, இருதய துடிப்பின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மயக்க மருந்து முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் வலி நிவாரணி மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்