இது என்னடா... புதுசா இருக்கு? அலாவுதீன் போல.. பறக்கும் மனிதர் - வைரல் வீடியோ
சமூக வலைதளங்களில் ஒரு வித்தியாசமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
யூடியூப் தளத்தில் ‘RhyzOrDie’ என்ற பெயரில் ஒருவர் செனலை நடத்தி வருகிறார். அவர் கடந்த மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் இவர் அலாவுதீன் போல் வேடம் அணிந்து கொண்டு ஒரு பாயை வைத்து கொண்டு மிதக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.
முதலில் சாலையில் மிதப்பது போலவும் பின்னர் கடலில் மிதப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் வியந்தனர். அந்த வீடியோவை பார்த்த பலர் மாயஜாலம் மந்திரம் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
இது குறித்து அந்த மனிதர் கூறியதாவது -
முதலில் சாலையில் செல்வதற்காக ஒரு பிவிசி பைப் ஒன்றை தயார் செய்தேன். அதை ஒரு எலெக்டிரிக் போர்டு உடன் இணைத்தேன். அதன் பிறகு, அந்த போர்டு முழுவதையும் ஒரு கார்பேட் வைத்து மறைத்தேன்.
இதனால் அது பார்ப்பதற்கு ஒரு பாயை வைத்து மிதப்பது போல் தெரியும். தண்ணீரில் செல்லும் போது, ஒரு இ-ஃபாயில் போர்டை தயார் செய்தேன். அந்தப் போர்டு நீரில் சர்ஃபிங் செய்ய உதவும் சர்ஃபிங் போர்டு வைத்து செய்தேன்.
அந்த போர்டு மீதும் கார்பேட் செய்து மிதப்பது போல் தெரியும். இதை பார்ப்பவர்களுக்கு ஒரு மாயஜாலம் செய்து மிதந்தது போல் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வீடியோவை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். பலர் இவரின் முயற்சியை பாராட்டி வருகிறார்கள்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.