பசியால் புத்திசாலி நாய் செய்த செயலைப் பாருங்க... - அசந்துடுவீங்க...
செல்லப்பிராணியாக பலர் நாய்களை தங்கள் வீட்டில் வளர்த்து வருகிறார்கள். தன்னை வளர்க்கும் உரிமையாளரின் மீது நாய்கள் அலாதி அன்பு வைத்திருக்கும்.
அது மட்டுமல்லாமல், மனிதர்களை போல வளர்ப்பு நாய்கள் புத்திசாலியாக இருக்கும். தற்போது ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நாயின் உரிமையாளர் தன் வீட்டில் சமையல் வேலையை முடித்துவிட்டு சாப்பிட அமர்ந்துள்ளார். அப்போது அந்த நாய் தான் வழக்கமாக சாப்பிடும் தட்டை தன் வாயில் கவ்விக் கொண்டு ஓடிவந்தது. முதலில் தனக்கு உணவை வைக்கச் சொல்லி அது சத்தமும் எழுப்பிக்கொண்டிருந்தது.
இதோ அந்த காட்சி -
பாஸ் பசிக்குதுல... முதல்ல சோத்த போட்டுட்டு அப்புறம் மொபைல்ல நோண்டுங்க? pic.twitter.com/rSNRRbMSQe
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) December 4, 2021