பாகுபலி இயக்குனர் ராஜமெளலியையே மிஞ்சிவிட்ட கல்யாண வீடியோகிராபர் - மணமக்களை பாகுபலி ஸ்டைலில் வைரலாகும் வீடியோ
திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கிறார்கள்.
இப்போதெல்லாம் கல்யாண மாப்பிள்ளையையும், பெண்ணையும் ஹிட் அடித்த பாடலுக்கு நடனமாட வைத்து அதை வீடியோவாக எடுப்பதும் பேஷன் ஆகிவிட்டது. சில திருமணங்களில் கல்யாணப் பொண்ணே திடீரென நடனமாடி பட்டையைக் கிளப்புவதும் உண்டு.
தற்போது, பாகுபலி படத்தை அப்படியே கல்யாண வீடியோவில் கண்முன்பாகக் கொண்டு வந்து நிறுத்து இருக்கிறார்கள். அதில் மணப்பெண் பாகுபலியில் அறிமுகமாகும் அனுஷ்கா ஸ்டைலிலும், ஹீரோ அதேபோல் பாகுபலி ஹீரோ பிரபாஸ் அறிமுகம் ஆகும் காட்சி போலவும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மிகப்பெரிய அளவு பட்ஜெட்டில் இந்த கல்யாண வீடியோ செம அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ராஜமெளலி, ஷங்கர் உள்ளிட்ட பிரமாண்ட இயக்குனர்களுக்கே சவால் விடும்வகையில் கல்யாண வீடியோகிராபர் செய்திருக்கும் இந்த வேலை மிகவும் ரசிக்கப்படியாக இருக்கிறது.
இதோ அந்த வீடியோ -