பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பெண் செய்த செயலை பாருங்க... - அதிர்ச்சி வீடியோ வைரல்

entertainment-viral-video
By Nandhini Dec 28, 2021 07:56 AM GMT
Report

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இளம்பெண் ஒருவர் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பெண் ஒருவர், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெருவின் நடுவில் நின்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அப்போது, மக்கள் சிலர் அந்த வழியாக நடந்து சென்றுள்ளனர்.

மேலும் குடியிருப்பு மத்தியில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது போல் இருந்தது. அதனால் நெட்டிசன்கள் பலரும் அப்பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.