சமூகவலைத்தளத்தை கலக்கும் பாட்டி நடனம் - நீங்களே பாருங்களே... வாயடைத்து போய்டுவீங்க...

entertainment-viral-video
By Nandhini Dec 18, 2021 04:49 AM GMT
Report

சமூகவலைத்தளத்தில் 63 வயது கொண்ட பாட்டியின் நடனம் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த பாட்டியின் நடனம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

தன்னுடைய நடனத்தின் மூலம், எந்த வயதிலும் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த பாட்டி பலருக்கு கற்று கொடுத்துள்ளார். ரவி பாலா சர்மாவின் இந்த நடன வீடியோவுக்கு இதுவரை ஆயிரக்கணக்கான லைக்குகள் கிடைத்திருக்கிறது.

‘சக்கா சக்’ பாடல், தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலி கான் நடிப்பில் உருவாகி வரும் ‘அத்ராங்கி ரே’ படத்தின் பாடலாகும். இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஸ்ரேயா கோஷல் இப்பாடலை பாடியுள்ளார்.

பாட்டிய நடனமாடிய இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரவி பாலா சர்மாவை பாராட்டி வருகிறார்கள்.