மத்திய பாதுகாப்பு படை அதிகாரியை பார்த்து ராயல் சல்யூட் அடித்த சிறுவன் - வீடியோ வைரல்

entertainment-viral-video
By Nandhini Oct 26, 2021 08:39 AM GMT
Report

பெங்களூர் விமான நிலையத்தில் வாகனத்தில் நின்றிருந்த மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சிறுவன் ஒருவன் சல்யூட் வைக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு விமான நிலையத்தில் சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, இவனுக்கு எதிரே அங்கிருந்த வாகனத்தில் மத்திய பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் நின்றிருப்பதை பார்த்தான். உடனே, அந்த சிறுவன் சற்றும் யோசிக்காமல் அதிகாரியை பார்த்து க்யூட்டாக சல்யூட் அடித்தான்.

சிறுவனின் இச்செயலை எதிர்பார்க்காத அதிகாரி அவரும், பதிலுக்கு கெத்தாக சிறுவனுக்கு சல்யூட் அடித்துள்ளார். தற்போது, சிறுவனின் சல்யூட் மரியாதை ஏற்றுக்கொண்டும் பதில் சல்யூட் வைத்த அதிகாரிக்கு பலரும் சமூகவலைத்தளத்தில் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.