தம்பதியரின் விருந்தில் கலந்துகொண்ட புலி - வைரல் வீடியோ
துபாயில் ஒரு தம்பதி கொடுத்த விருந்தில் புலி ஒன்றும் கலந்துக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சில வெளிநாடுகளில் கருவில் இருக்கும் தங்கள் குழந்தையின் பாலினத்தை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்க விழாவாக ஏற்பாடு செய்து அறிவிப்பது வழக்கம்.
இந்நிலையில், துபாயில் வசிக்கும் ஒரு தம்பதியர், பிறக்கப்போகும் தங்கள் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்துவதற்காக ஹோட்டல் ஒன்றில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த ஹோட்டலில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்புப் புலி ஒன்று விருந்தினர் ஏற்பாடு செய்திருந்த மிதக்கும் பலூனை தாவி உடைத்தது. அப்போது அதிலிருந்து வண்ணப்பொடி கொட்டியது. பலூனிலிருந்து இளஞ்சிவப்பு பொடி வெளிவந்ததால், தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்பதை குறிக்குமாம்.
தற்போது இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Today Gold Rate: அதிரடியாக குறைந்து மகிழ்ச்சியளித்த தங்கத்தின் விலை...இன்று சவரன் எவ்வுளவு? Manithan
ஈரானின் அனுமதியின்றி ஹோர்முஸை கடக்க முயலும் கப்பல்கள்! புரட்சிகர காவல்படை கடும் எச்சரிக்கை IBC Tamil