நான் அம்மாவ பார்க்கப் போறேனே.... நம்பிக்கையுடன் ஆவலில் செல்லும் க்யூட்டான குட்டி யானை!
கூடலூர் வன கோட்டத்தில், தங்கசுரங்கம் பகுதியில் ஒரு வயது மதிக்கத்தக்க பெண் யானை குட்டி ஒன்று தனது தாயை பிரிந்த நிலையில் சுற்றி திரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த குட்டியானை சிறிய குழியில் விழுந்து விட்டது. அதனை பத்திரமாக மீட்ட வனத்துறை ஊழியர்கள் அதனை தாயிடம் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
பின்னர் நேற்று மாலை அருகில் உள்ள வனப்பகுதியில் யானைக் கூட்டம் இருப்பதை அறிந்த வனத்துறையினர் அந்த பெண் யானை குட்டியை கால்நடையாகவே அழைத்துச் சென்றனர். அந்த யானைக் கூட்டம் நடுவில் குட்டியானை விடப்பட்டது.
பின்னர் குட்டியின் குரலை கேட்டதும், அங்கே ஓடோடி வந்த காட்டு யானைகள் குட்டியை பத்திரமாக காட்டுக்குள் அழைத்துச் சென்றன. தாயிடம் சேர்க்க வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சியில், குட்டி யானை மிகவும் நம்பிக்கையுடன் வனத்துறையினரை பின்தொடர்ந்து சென்ற காட்சிகள் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. தற்போது இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
A kutty baby elephant was reunited with the family after rescue by TN foresters in Mudumalai. Most heartwarming indeed. Kudos ?? #TNForest #elephants #mudumalai pic.twitter.com/eX9gBd3oK7
— Supriya Sahu IAS (@supriyasahuias) October 6, 2021