பாகிஸ்தானில் வித்தியாசமாய் ஒரு துணிகர திருமண சவாரி - வைரல் வீடியோ

entertainment-viral-video
By Nandhini Oct 04, 2021 09:51 AM GMT
Report

பாகிஸ்தானின் ஹுன்சா பள்ளத்தாக்கிலிருந்து ஒரு திருமண நிகழ்வில், மணமகனும், மணமகளும் தங்களுக்கு திருமணம் நடக்கவிருந்த மண்டபத்துக்கு செல்ல, JCB வாகனத்தில் சவாரி செய்ய முடிவு செய்துள்ளனர்.

அந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் தங்கள் திருமண உடையில், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஜேசிபியின் லோடிங் பக்கெட் பகுதியில் அவர்கள் நின்றனர். இந்த ஜோடி ஜெ.சி.பி-யில் செல்லும்போது, சாலையில் உள்ள மக்கள், கத்தி, கை தட்டி, அவர்களை உற்சாகப்படுத்தியும், அவர்களை வாழ்த்தியும், ஆரவாரம் செய்வதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.

ஜேசிபி நிறுத்தப்பட்டு அவர்கள் அதிலிருந்து இறங்கும்போது பட்டாசுகள் வெடிக்கப்படுவதையும் காண முடிகிறது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் இந்த ஜோடியைப் புகழ்து பல கமெண்ட்களை அளித்து வருகின்றனர்.

“புது வழியில் தங்கள் புதிய வாழ்க்கையை துவக்க முன்வந்த இந்த கியூட் ஜோடிக்கு வாழ்த்துக்கள்” என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ -