இந்த குழந்தை செய்த செயல் - அசந்து போன அதிகாரிகள் - வைரல் வீடியோ

entertainment-viral-video
By Nandhini Sep 26, 2021 07:48 AM GMT
Report

இரு அதிகாரிகள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த அதிகாரிகளில் ஒருவர் கையில் உடல் வெப்ப நிலை சோதனை செய்யும் கருவி இருந்தது. இதைக் கண்ட 3 வயதான குழந்தை ஒன்று அந்த அதிகாரியின் அருகில் சென்று கையை நீட்டியது. பேசிக் கொண்டிருந்த அதிகாரி அந்த குழந்தையை பார்க்கவில்லை. ஆனால், அந்த குழந்தை அதிகாரியிடம் கை நீட்டிக் கொண்டே இருந்தது. 

அதைக் கவனித்த அதிகாரி, குழந்தை கையை நீட்டியதைப் பார்த்ததும், உடல் வெப்ப நிலை சோதனை செய்து கருவியை கொண்டு சோதனை செய்தார். அந்த குழந்தை மற்றொரு கையையும் காட்டியது. அதையும் சோதனை செய்தார். பின்னர் தான் வைத்திருந்த பொம்மைக் கூட அந்த குழந்தை சோதனை செய்ய சொன்ன செயல் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்து விட்டது. 

ஆயிரக்கணக்கானோரை பார்த்து ரசிக்கச் செய்த அந்த வீடியோ இதோ -