ரஸ்க்கை நாக்கால் நக்கி, காலால் மிதித்து பாக்கெட் செய்யும் ஊழியர் - அதிர்ச்சி வீடியோ
ரஸ்க் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ரஸ்குகளை பேக் செய்யும் போது அங்கு இருந்த ஊழியர் ஒருவர் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த ஊழியர் ஒரு தட்டில் வைக்கப்பட்டுள்ள ரஸ்களை தனது காலால் மிதித்தும், அதனை பாக்கெட்டில் அடைக்கும் போது நாக்கால் நக்கியும் பாக்கெட்டில் அடைத்திருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விஷயத்தை அவர் வேண்டுமென்றே செய்தார் என்பது அந்த வீடியோவில் தெள்ள தெளிவாகிறது.
அந்த வீடியோவில் அந்த ரஸ்க்குகளின் மீது கால்களை வைத்து கொண்டும் அதை காலால் மிதித்து அடுக்குவது தெரிகிறது. தற்போது இந்த ஊழியரின் செயலை கண்டு சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் கண்டனக் குரல்கள் ஒலித்து வருகிறது.
இதோ அந்த வீடியோ -