ஆழ்ந்த தூக்கத்தில் உறங்கிய குட்டி யானை - தாய் யானை எழுப்பும் வைரல் வீடியோ!

entertainment-viral-video
By Nandhini Sep 19, 2021 05:25 AM GMT
Report

செக் குடியரசு நாட்டிலுள்ள ப்ராக் மிருகக்காட்சிசாலையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், யானைக் குட்டி ஒன்று தரையில் படுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது. அதன் தாய் யானை அருகில் நின்று தும்பிக்கையால் தொட்டு தனது குட்டியை எழுப்பிவிட முயற்சி செய்கிறது. ஆனால் அந்த யானைக்குட்டியோ அசைவின்றி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.

இதனையடுத்து, தன் குழந்தைக்கு என்ன ஆனது என்று, தாய் யானை பரிதவித்து நிற்பதைப் பார்த்த அங்கிருந்த பூங்கா பராமரிப்பாளர்கள் வந்து, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த யானைக்குட்டியை தட்டி விட்டும் கிச்சுகிச்சு மூட்டியும் எழுப்ப முயன்ற பிறகே தூக்கத்திலிருந்து வேகவேகமாக எழுந்து தனது தாயை நோக்கி ஓடியது அந்த குட்டி யானை.

இதோ அந்த வைரல் வீடியோ -