பட்டு வேட்டி சட்டையில் ‘பிக்பாஸ்’ பாலா வெளியிட்ட வீடியோ - வைரலானது
entertainment-viral-video
By Nandhini
பிரபல தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகர் ஆரி டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு அடுத்தபடியாக ரசிகர்களின் ஆதரவை பெற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளரான பாலா இரண்டாம் இடத்தை கைப்பற்றினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே பாலா வித்தியாசமாக விளையாடி
தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இந்நிலையில் பாலாஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் பட்டு வேட்டி, சட்டை போட்டு டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.