தலைக்கேறிய போதை - நடுரோட்டில் ரகளை செய்த மாடல் அழகி - வீடியோ வைரல்

entertainment-viral-video
By Nandhini Sep 12, 2021 05:27 AM GMT
Report

ரொம்பவும் பரபரப்பாக இருந்த சாலையில் வாகனங்கள் விறுவிறுப்பாக கடந்துக்கொண்டிருந்தன. அப்போது, ராணுவ வாகனத்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்ணை அந்தப்பகுதியில் சென்றவர்கள் தங்களது செல்போன் கேமராக்களில் படம் பிடித்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராணுவ வாகனத்தை மறித்த இளம்பெண் பேணட்டின் மீது சாய்ந்தவாறு செல்போன் பேசிக்கொண்டிருந்தார்.

வானத்தில் இருந்த ராணுவ வீரர்கள் ஹாரன் அடித்து அந்தப்பெண்ணை விலகிச் செல்லுமாறு கூறினார். உடனே அந்தப்பெண் ராணுவ வீரர்களுடன் வாக்கு வாதம் செய்யத் தொடங்கினார். காரை மெல்ல இயக்கத் தொடங்கியதும் ஆத்திரமடைந்த அப்பெண் தனது காலால் வாகனத்தின் ஹெட்லைட்டை தாக்கினார்.

அப்போது அவரது ஹேண்ட்பேக்கில் இருந்த மதுபாட்டில் சாலையில் விழுந்து உடைந்து நொறுங்கியது. இதனையடுத்து வாகனத்திலிருந்து இறங்கிவந்த ராணுவ வீரர் அந்தப்பெண்ணை நகர்ந்து செல்லுமாறு கூறினார்.

ராணுவ வீரரை தள்ளிவிட்டு அவருடன் வாக்குவாதத்தில் அப்பெண் ஈடுபட்டார். அந்தப்பெண் சாலையிலிருந்து நகர்ந்ததும். ராணுவ வீரர் வாகனத்தை எடுத்துச் சென்றார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அப்பெண் டெல்லியை சேர்ந்த மாடல் அழகி என்பது தெரியவந்தது. தனது இரண்டு நண்பர்களுடன் குவாலியரை சுற்றிப்பார்க்க வந்திருக்கிறார். மதுபோதையில் அந்தப்பெண் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

ராணுவ வீரர்கள் அந்தப்பெண் குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்காததால் அந்தப்பெண் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டதாக குவாலியர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.