‘எக்கா... இதுதான்க்கா விலை..’ பேரம் பேசி ஆப்பிள் வாங்கிய நாய் - வீடியோ வைரல்!

entertainment-viral-video
By Nandhini Aug 31, 2021 10:04 AM GMT
Report

இன்றைய சூழலில் மனிதர்கள் நாய்களோடு வாக்கிங் செல்வது, கடைகளுக்கு கூட்டிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் நாய்களை கடைகளுக்குச் சென்று எப்படி பொருட்களை வாங்க வேண்டும் என்று கற்று கொடுத்து விடுகிறார்கள்.

சிலர் பேர் கடைகளில் பேரம் பேசி தான் பொருட்களை வாங்க வேண்டும் என்ற மனநிலையில் வருவார்கள். அப்படித்தான், இங்கு சற்று வித்தியாசமாக நாய் ஒன்று சாலையோரங்களில் ஆப்பிள்களை விற்பனை செய்யும் பெண்ணிடம் வாங்கிய ஆப்பிளில் திருப்தியடையாததால், கூடையில் வைத்திருந்த ஆப்பிள்களைத் தொட்டு மேலும் ஆப்பிள் வேண்டும் என்று அதன் சைகை மொழியில் பேரம் பேசியது.

அப்பெண்ணுக்கும் கொஞ்ச நேரம் புரியாமல் இருந்தாலும் பின்னர் நாய் என்ன சொல்லவருகிறது என்று புரிந்து கொண்டு, ஒரு ஆப்பிளை கூடுதலாக பையில் வைத்தார். இதனையடுத்துதான் அந்த நாய் கூடையினை எடுத்துக்கொண்டு கர்ப்பிணியாக இருக்கும் மற்றொரு நாயுடன் மகிழ்ச்சியாய் செல்கிறது.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.