சீறும் மூன்று பாம்புகளா... இல்லை பட்டுப்பூச்சியா - பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய புகைப்படம்

entertainment-viral-news-butterfly
By Nandhini Oct 18, 2021 06:38 AM GMT
Report

சமூக வலைத்தளத்தில் ஒருவர் மூன்று பாம்புகளின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில், பாம்புகள் கோபமாக உள்ளதை போல் இருந்தது. ஆனால் உண்மை என்னவென்றால், அவை விஷப் பாம்புகள் கிடையாது. வைரல் போட்டோவில் அப்பாவி சிறிய பூச்சி மறைந்திருந்தது. அதன் இறக்கைகள் கோபமாக உள்ள பாம்புகளைப் போல இருந்தது.

இந்த பூச்சி அட்லஸ் அந்துப்பூச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது லெபிடோப்டெரா இனத்தின் மிகப்பெரிய பூச்சியாகும். லெபிடோப்டெரா இனங்களில் பட்டாம்பூச்சிகள் மற்றும் பூச்சிகள் அடங்கும். படங்களை பகிர்ந்துள்ள பதிவர் 'அட்டகஸ் அட்லஸ்’ உலகின் மிகப்பெரிய பட்டாம்பூச்சிகளில் ஒன்றாகும். இது இரண்டு வாரங்கள் மட்டுமே வாழ்கிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலர், தங்கள் கண்களை நம்ப முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். அது எப்படி பாம்பு போல் இருக்கிறது என்று பலர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

தேசிய வரலாற்று அருங்காட்சியகம், இந்த பூச்சி குறித்து கூறுகையில், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, ​​அது அதன் சிறகுகளை விரித்து, பாம்பின் தலை போல், வேட்டையாடுபவர்களை பயமுறுத்தும் என்று கூறியுள்ளனர். இந்த பூச்சி பெரும்பாலும் ஆசியாவில் காணப்படுகிறது. மிகப்பெரிய பூச்சியான அட்டகஸ் அட்லஸ் 2012ல் முதன்முதலில் இங்கிலாந்தில் காணப்பட்டது.

இதோ அந்த புகைப்படம் -