அமெரிக்காவில் 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 61 வயதான முதியவர் - வலுக்கும் கண்டனங்கள்
அமெரிக்காவில் 18 வயது இளம்பெண்ணை 61 வயதான அவரது ஞானத்தந்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடும் விமர்சனத்தையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் ப்ளோரிடாவில் மைக் ஹவுகாபுக் (61) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் 18 வயதுள்ள தேஜா என்ற இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்நிலையில், இந்த திருமணம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்ணின் கணவரான 61 வயது மைக் ஹவுகாபுக், தேஜாவின் ஞானதந்தை ஆவார்.
இது குறித்து மைக் ஹவுகாபுக் கூறுகையில், முகநூலிலிருந்து தானும், தன் மனைவியும் விலகிக் கொள்கிறோம். முகநூலில் தொடர்ந்து தங்களை பற்றி பலர் அவதூறாக விமர்சித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி, பெண்கள் பலர் என் மனைவியை பார்த்து பொறாமைபடுவதால் நாங்கள் விலகிக்கொள்கிறோம் என்றார்.
இது தொடர்பாக தேஜா கூறுகையில், ‘நான் யாரை பற்றியும் கவலைப்படவில்லை. இது என்னுடைய வாழ்க்கை நாங்கள் முழுமையாக வாழ்வோம் என்று அதிரடியாக கூறியுள்ளார்.