‘நான் விவாகரத்து வாங்கி விட்டேன்...’ உற்சாகமாக கிராண்ட் பார்டி கொடுத்த வினோத பெண்!
நாம் திருமணத்திற்கான பார்டி தருவார்கள் என்று தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், விவாகரத்துக்கு பார்டி கொடுத்து கொண்டாடிய சம்பவம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த சோனியா குப்தா என்ற பெண்மணி தனது இல்லத்தில் ஒரு ஆடம்பரமான விருந்தை நடத்தியுள்ளார். 45 வயதான இந்த பெண்மணி இவர் 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததை நினைத்து, வருத்தப்படவில்லை. மாறாக இப்போது சுதந்திரமாக மகிழ்ச்சியாக உள்ளதாக கூறி இருக்கிறார்.
இதற்காக ஒரு விவாகரத்து விருந்தை மிக ஆடம்பரமாக நடத்தியுள்ளார். இந்த விவாகரத்து வழக்கு 3 வருடங்களாக நீடித்தது. இந்நிலையில், தற்போது முடிவுக்கு வந்தததில் மிகவும் நிம்மதியாக உணர்கிறார்.
பார்ட்டியில் அவர் மிகவும் சந்தோஷமாக வலம் வந்தார். அவர் இவ்வாளவு நாளாக எவ்வளவு மன உளைச்சலை சந்தித்திருப்பார் என்பதை நாம் இதிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது. விவாகரத்தை கொண்டாட தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து விருந்து படைத்துள்ளார்.
விருந்தில், ‘finally divorced’ என்ற பொறிக்கப்பட்ட பேண்டை அணிந்து கொண்டு வலம் வந்தது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் மிகவும் சந்தோஷமான குதூகலமான நபர். அதனால், விருந்திற்கான ‘தீ’ கரையை பிரகாசமான கலராக வைத்திருக்கிறேன். கடந்த 17 ஆண்டுகளாக நான் மிகவும் மன உளைச்சலில் இருந்தேன். எனக்கு, எனது குதூகலத்தை திருப்பித் தந்த நாள் என்பதால், இதனை கொண்டாட நினைக்கிறேன்.
நான் மீண்டும் நானாகவே இருக்க விரும்பினேன்; என் திருமணத்திற்கு முன்பு, நான் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் குதூகலாமன நபராக இருந்தேன், நான் திருமணம் செய்த பிறகு, வாழ்க்கை நரகமானது. நான் என் குடும்பத்தினரிடம் நான் விவாகரத்து செய்ய வேண்டும் என்று சொன்னபோது, அவர்களும் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இல்லை. ஆனால் எனக்கு விவாகரத்து கிடைக்க எனது நண்பர்கள் பெரிதும் உதவினர் என்றார்.