அப்பாவின் போனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்த சிறுமி! அடுத்து வந்திறங்கிய பெரிய வேன் - குடும்பமே ஷாக்!

entertainment-samugam
By Nandhini Jun 26, 2021 01:22 PM GMT
Report

சீனாவில் தன் தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, தந்தையின் செல்போனை எடுத்து ஆன்லைனில் உணவு ஆர்டரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, தந்தையும் தன் செல்போனை மகளிடம் கொடுத்து ஏதாவது ஒரு உணவை ஆர்டர் செய்து கொள் என்று சொல்லியுள்ளார்.

அந்த மகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் அதை ஆர்டர் செய்திருக்கிறாள். அதுவரை எல்லாமே நன்றாத்தான் சென்று கொண்டிருந்தது. திடீரென வீட்டின் கார்னிங் பெல் அடித்தது. வெளியே சென்று தந்தை பார்த்த போது ஆர்டர் கொண்டு வந்தவர் நூடுல்ஸை ஒரு பெரிய வேனில் எடுத்து வந்தார். அவர்களிடம் நூடுல்ஸ் வந்திருக்கிறது என சொல்லி பில்லை கொடுத்தார்.

தந்தை அந்த பில்லை பார்த்த அடுத்த நொடி அப்படியே ஷாக் ஆகிவிட்டார். மொத்தம் ரூ15 ஆயிரத்திற்கு நூடுல்ஸை அந்த சிறுமி ஆர்டர் செய்திருக்கிறாள்.

அதாவது 1 நூடுல்ஸ் ஆர்டர் செய்வதற்கு பதிலாக 100 நூடுல்ஸ் ஆர்டர் செய்துவிட்டாள். அதிகமாக ஆர்டர் வந்துள்ளது என அதை கிராஸ் செக் செய்யாமல் அந்நிறுவனமும் நூறு நூடுல்ஸை தயார் செய்து அனுப்பிவிட்டது.

இப்பொழுது அதை வாங்குவதை தவிர அவருக்கு வேறு வழி கிடையாது. இதனையடுத்து, தந்தை அந்த நூடுல்ஸ் அத்தனையையும் வாங்கி தன் வீட்டிற்கு 8 நூடுல்ஸை வைத்துவிட்டு மற்ற நூடுல்ஸ்களை அக்கம் பக்கத்தில் உள்ள ஏழை மக்களுக்கு தானமாக வழங்கியுள்ளார்.

டெலிவரி நிறுவனத்திற்கும், தன் வங்கி கணக்கிலிருந்த ரூ15 ஆயிரம் பணத்தை கட்டி இருக்கிறார். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அப்பாவின் போனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்த சிறுமி! அடுத்து வந்திறங்கிய பெரிய வேன் - குடும்பமே ஷாக்! | Entertainment Samugam