என்கிட்டயா திருட வர... திருடனுக்கு பாட்டி கொடுத்த தரமான தண்டனை - வீடியோ வைரல்
entertainment-samugam
By Nandhini
இங்கே ஒரு பாட்டி, தன் வீட்டு படிக்கட்டில் சேரில் ரிலாக்ஸ்டாக அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது, தன் கையில் செல்போனை வைத்தபடி யூடியூப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போது, அந்த வழியாக இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் பின்சீட்டில் இருந்தவர் மெல்ல இறங்கி பாட்டியின் அருகில் வந்து செல்போனை பிடுங்க முயற்சி செய்தான். அப்போது அந்த பாட்டி உடனே செல்போனை விட்டுவிடுவார் என்று திருடன் நினைத்தான்.
ஆனால், பாட்டியோ அவர் தலையில் மாட்டியிருந்த ஹெல்மெட்டை பிடுங்கி தர்ம அடி கொடுத்து துவைத்தார். ஒரு கட்டத்தில் பாட்டியிடம் ஈடுகொடுக்க முடியாத திருடன் பைக்கின் பின்னால் ஏறி ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.
இதோ அந்த வைரல் வீடியோ -