பணம் உலகத்துல இப்படியொரு அதிர்ஷ்டசாலி மருமகளா? இந்த வீடியோ பார்த்தா நீங்களே அசந்துடுவீங்க!
திருமணமாகி வீட்டிற்கு வந்த மணமகளை மாப்பிள்ளை வீட்டார் வித்தியாசமாக வரவேற்ற வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக திருமணமாகி பெண் தனது கணவர் வீட்டிற்கு வரும் போது, மருமகளே மருமகளே பாடலை போட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்பதை பார்த்திருக்கிறோம்.
ஆனால், இங்கு வித்தியாசமாக வீட்டிற்கு வரும் மருமகளை வரவேற்றுள்ளனர். புதுப்பெண் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு எத்தனை படிக்கட்டு ஏறி வருகின்றாரோ ஒவ்வொரு படிக்கட்டிற்கும் கட்டுக்கட்டாக பணம், வெள்ளி சாமான்கள் கொடுத்து மருமகளை வரவேற்றுள்ள காட்சி பார்ப்போம் மனதை கொள்ளையடித்துள்ளது.
இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் உலகத்துல ரொம்ப குடுத்து வைச்ச மருமகள் என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.