எவ்ளோ உயரம்... புர்க் கலிஃபாவின் உச்சியில் நின்ற பெண்.. - வைரலாகும் எமிரேட்ஸ் விளம்பர வீடியோ

entertainment-viral-video Emirates promo video
By Nandhini Jan 19, 2022 06:42 AM GMT
Report

  புர்ஜ் கலிஃபாவில் மீது மீண்டும் ஒரு முறை பெண் ஒருவரை நிற்கவைத்து எமிரேட்ஸ் விமான நிறுவனம் புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

பிரபல விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் எப்போதும் தன்னுடைய பாணியில் விளம்பர படங்களை எடுத்து வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில் தற்போது ஒரு பெண் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் மேல் எமிரேட்ஸ் ஊழியரைப்போல் வேடம் இட்டு நிற்பது போன்ற வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ மீண்டும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதேபோன்று ஒரு விளம்பர வீடியோவை எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

இந்த விளம்பர வீடியோவை பலரும் கண்டு ரசித்தனர். எப்படி புர்ஜ் கலிஃபாவின் மீது ஒரு பெண்ணை நிற்க வைத்து எடுக்க முடியும் என்றும், ஒரு விளம்பர படத்திற்காக இப்படி யாராவது செய்வார்களா என்று பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது 2வது வீடியோவை வெளியிட்டுள்ளனர். புர்ஜ் கலிஃபாவின் 160ஆவது மாடிக்கு மேல் இருந்து உயரமான இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு செல்ல அவர்களுக்கு கிட்டதட்ட ஒரு மணி நேரம் எடுத்துள்ளது.

அதன்பின்னர் விளம்பரம் படம் எடுக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அப்பெண்ணை அங்கு நிற்க வைத்துள்ளனர். அந்த வீடியோவில் எமிரேட்ஸ் நிறுவனம் உங்களை பல சுவாரஸ்யமான இடங்களுக்கு கூட்டி சென்றுள்ளது என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

புர்ஜ் கலிஃபாவில் நிற்கும் பெண் அங்கு சென்றவுடன், "உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் நான் நிற்கிறேன்" என மகிழ்ச்சியாக கூறுவதும் இந்த வீடியோவில் காட்சிகளாக வருகிறது.

இந்த இடத்தில் நிற்பதற்கு அப்பெண் சில நாட்கள் பயிற்சி எடுத்து கொண்டதாகவும், எமிரேட்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, புர்ஜ் கலிஃபாவின் உயரமான பகுதியில் நடிகர் டாம் குரூஸ், ஐக்கிய அமீரக மன்னர் முகமது பின் சல்மான் ஆகியோர் ஏறி நின்றிருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தப்படியாக இந்தப் பெண் அங்கு 2வது முறையாக ஏறி நின்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.