இறப்பதற்கு முன்பு கடைசியாக காமெடியில் கலக்கிய விவேக்கின் ‘லோல் ஷோ’ - டிரெய்லர் வெளியானது!
சர்வதேச அளவில் புகழ் அடைந்த காமெடி நிகழ்ச்சியான ‘லோல் நிகழ்ச்சி’ தற்போது தமிழில் ஒளிப்பரப்ப இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி நேரடியாக ஓடிடியில் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை அமேசான் பிரைமில் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் வெளியாக உள்ளது.
6 எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்நிகழ்ச்சிக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. புத்தம் புது நகைச்சுவை நிகழ்ச்சியாக தமிழில் ஒளிப்பரப்பாக உள்ள இந்நிகழ்ச்சிக்கு ‘எங்க சிரி பாப்போம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியை மறைந்த விவேக் மற்றும் நடிகர் சிவா இணைந்து தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். நடிகர் விவேக் இறப்பதற்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில்தான் கடைசியாக அவர் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் மாயா எஸ். கிருஷ்ணன், அபிஷேக் குமார், ப்ரேம்ஜி அமரன், ஆர்த்தி கணேஷ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், சதீஷ், புகழ், பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், பேகிமற்றும் ஸ்யாமா ஹரினி உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் டிரெய்லரை அமேசான் பிரைம் இன்று வெளியிட்டிருக்கிறது. இதில் காமெடி கலாட்டாவில் ஈடுபட்டுள்ள போட்டியாளர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளனர்.
