பிரபல டி.வி.நிகழ்ச்சியில் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுத எஸ்.பி.பி. மகன் - நெஞ்சை உருக்கிய வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8-வது சீசன் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.
தனது 40-வது ஆண்டு பயணத்தை கொண்டாடும் விதமாக பிரபல பாடகியான சின்னக்குயில் சித்ரா இந்த வாரம் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது, டாப் 7 போட்டியாளர்களின் ஒருவரான பரத்துடன் இணைந்து சித்ரா, சென்னை 600028 படத்தில் இடம் பெற்ற ‘யாரோ யாருக்குள் இங்கு யாரோ’ என்ற பாடலை பாடினார். அப்போது, இந்த பாடலை சித்ராவும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடியிருந்தனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பரத் பாடும் போது, அப்படியே எஸ்.பி.பி பாடுவது போலவே இருந்தது. இதனால் உணர்ச்சிவசப்பட்ட சரண் துக்கம் தாங்க முடியாமல், கண்ணீர் விட்டு கதறி அழ ஆரம்பித்தார். மேலும், தனது தந்தையை மிகவும் மிஸ் செய்கிறேன் என்று கூறி கண் கலங்கிய படியே பேசினார்.
இதோ அந்த வீடியோ...