இதுதான்யா தாய் பாசம்... விபத்தில் உயிருக்கு போராடி கன்றுக்குட்டி : கண்கலங்கி துடிதுடித்த தாய்ப்பசுவின் பாசப்போராட்டம்!

entertainment
By Nandhini Aug 10, 2021 08:01 AM GMT
Report

கன்னியாகுமரி அருகே வாகனம் மோதி படுகாயம் அடைந்த கன்றுக்குட்டியைப் பார்த்து துடிதுடித்துப் போன தாய்ப்பசுவின் பாசப்போராட்டம் பார்த்து அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்கியது.

குமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மாடுகள் அதிமாக சுற்றி திரிந்து வருகின்றன. இதனால், அடிக்கடி மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.

இந்நிலையில், செட்டிகுளம் ஜங்ஷன் அருகே ஒரு பசுவும், கன்றும் சாலையில் சுற்றி திரிந்து வந்துக்கொண்டிருந்தன. அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கன்றுக்குட்டி மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் கன்றுக்குட்டி படுகாயம் அடைந்தது. அந்த கன்றுக்குட்டியால் எழுந்து நிற்கக்கூட முடியாமல் சாலையில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் விடாமல் கத்திக்கொண்டு தாய்ப்பசு தனது கன்றுக்குட்டியை சுற்றி சுற்றி வந்து கண்ணீர் விட்டது.

அப்போது அந்த வழியாக வந்த கால்நடை மருத்துவர் ஒருவர் படுகாயமடைந்த கன்றுகுட்டிக்கு மருத்துவ முதலுதவியை செய்தார்.

கன்றுக்குட்டிக்கு மருத்துவ உதவி செய்யும் போது, தாய்ப்பசு கண்ணீர்விட்டபடி கன்றுகுட்டியை சுற்றி சுற்றி வந்தது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

தாயின் அன்பிற்கு இந்த உலகத்தில் ஈடுஇணை எதுவுமே இல்லை என்பதை அந்த பசு உணர்த்தியது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்கியது. 

இதுதான்யா தாய் பாசம்... விபத்தில் உயிருக்கு போராடி கன்றுக்குட்டி : கண்கலங்கி துடிதுடித்த தாய்ப்பசுவின் பாசப்போராட்டம்! | Entertainment