ஒரே ஆட்டுக்கடா ரூ.1 கோடிக்கு விற்பனை : காரணம் இதுதானாம்?
அயர்லாந்தில் ஆட்டு கடா ஒன்று ரூ.1 கோடிக்கு மேல் வாங்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அயர்லாந்தில் உள்ள பாலிபோஃபில், ரிச்சர்ட் தாம்சன் என்பவர் வசித்து வந்தார். விவசாயி ஆன இவர் சஃபோல்க் வகையை சேர்ந்த ஆட்டு கடாவை வளர்த்து வந்தார். இந்த ஆட்டு கடா தான் ரூ.1 கோடிக்கு மேல் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரிச்சர்ட் தாம்சன் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்ததாவது-
நல்ல விலைக்கு விற்கப்படும் என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு அது விலை போகும் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. இது போன்ற விஷயங்கள் எல்லாம் வாழ்வில் ஒருமுறை தான் நடக்கும்.
இதன் மூலம் என்னுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறி இருக்கிறது. 7 மாத குட்டியான இது 44,000 யூரோவுக்கு (மதிப்பில் 1,03,89,596 கோடி ரூபாய்) கடந்த திங்கட் கிழமை Blessington Mart in Co Wicklow-விற்கு விற்பனைக்காக கொண்டு வந்தேன்.
அப்போதுதான், இந்த விலைக்கு இந்த ஆட்டு கடா விலை போனது. இதுவே அயர்லாந்தில் ஒரு கடாவிற்கு அதிகபட்சமாக செலுத்தபட்ட மிகப் பெரிய தொகை.
இவ்வாறு அவர் பேசினார்.
வடக்கு அயர்லாந்தில் உள்ள கொலரைனைச் சேர்ந்த விவசாயி டென்னிஸ் டெய்லர் தலைமையிலான கூட்டமைப்பே இந்த ஆட்டு கடாவை இவ்வளவு விலை கொடுத்து வாங்கியுள்ளது.
இது குறித்து டென்னிஸ் கூறுகையில், இந்த ஆட்டு கடா பார்க்க மிகவும் அழகாக இருந்தது. அதுமட்டுமின்றி இதை பலரும் தேடிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் இதை வைத்து இனப்பெருக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்றார்.
This 'golden' ram sold for a record-breaking £37K ? pic.twitter.com/6YGT6mQpuq
— The Sun (@TheSun) August 5, 2021