நடிகர் விஜய்யாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர் - லைக்குகளை தெறிக்க விடும் ரசிகர்கள்!
பிரபல கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் நடிகர் விஜய் போன்று உள்ள கெட்டப்பில் வெளியிட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் பிரபல கிரிக்கெட் வீரராக இருப்பவர் டேவிட் வார்னர். இந்திய அணிக்கு எதிராக போட்டிகளில் விளையாடும்போது சிம்ம சொப்பனமாக இருந்துள்ளார் டேவிட் வார்னர். இவரின் கிரிக்கெட் போட்டியை காண இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர். உள்ளூர் போட்டியான ஐபிஎல்லில் கூட ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய் போன்றே இருக்கும் வீடியோ ஒன்றை டேவிட் வார்னர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். விஜய்யின் ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற "செல்லா குட்டி" பாடலில் டேவிட் வார்னர் முகத்தை மாற்றி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வரும், இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை போட்டு தெறிக்க விட்டுள்ளனர்.