கிறிஸ்தவ வழிபாட்டு தலத்திற்குள் காவி கொடியுடன் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்

Tamil nadu Tamil Nadu Police
By Thahir Oct 03, 2022 11:05 AM GMT
Report

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலத்திற்குள் காவி கொடியுடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் அருகே உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலத்திற்குள் காவி கொடியுடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு ஆராதனையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்தவ வழிபாட்டு தலத்திற்குள் காவி கொடியுடன் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் | Entered With Saffron Flag And Threatened To Kill

மேலும் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்களை கட்டுப்படுத்தி போலீசார் வெளியே அழைத்துச் சென்ற நிலையில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.