பொது இடங்களில் குர்பானி கிடையாது.. முதல்வர் யோகி அதிரடி தடை..

Yogi Adityanath Bakrid
1 வருடம் முன்
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா

பொது இடங்களில்  குர்பானிக்காக மாடுகள், ஒட்டகங்களை பலியிடக்கூடாது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், இனி வரும் காலம் பண்டிகை காலம் என்பதால் 3வது அலை பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கொரோனாவை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்படி இந்தாண்டு கன்வர் யாத்திரையை உத்தரப்பிரதேச மாநில அரசு ரத்து செய்துள்ளது.

அதேசமயம் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பக்ரீத் கொண்டாட்டங்களின் போது பொது இடங்களில் 50 பேருக்கு மேல் கூட்டமாக கூடக்கூடாது.

குர்பானிக்காக மாடுகள் அல்லது ஒட்டகங்களை பலியிடக்கூடாது என்றும், பொது இடங்களில் குர்பானி நிகழ்வுகள் நடத்தப்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.