சென்னை எண்ணுரில் காற்றில் கலந்த விஷம்...கிராமத்தையே காலி செய்து வெளியேறிய மக்கள்..!
சென்னை எண்ணுரில் அருகில் இருந்த தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதால், பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
வாயுக்கசிவு
இன்னும் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட எண்ணெய் கலப்பில் இருந்தே சென்னை எண்ணூர் பொதுமக்கள் மீண்டுவராத நிலையில், தற்போது மற்றொருமொரு பாதிப்பு அப்பகுதி மக்களை வாட்டியுள்ளது.
சென்னை எண்ணூரில் கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட் எனும் நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலைக்கு திரவ அம்மோனியா கடலுக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலமாக கடற்கரையில் இருந்து சுமார் 2 அல்லது 3 கி.மீ. தொலைவில் கப்பல்களிலிருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த குழாய்களில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட கசிவின் காரணமாக அருகில் இருக்கும் கிராமங்களான சின்ன குப்பம், பெரியகுப்பம், பர்மா நகர் மற்றும் நேதாஜி நகர் போன்ற பகுதிகளில் கடும் நெடியுடன் கூடிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளியேறிய மக்கள்
இந்த வாயு கசிவால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது மட்டுமின்றி மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் பெரிய குப்பம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு வெளியேறி இருக்கின்றனர்.