எண்ணூர் வாயுக்கசிவு - வாழ தகுதியற்ற இடமா..? மாசு கட்டுப்பாட்டு வாரியம் முக்கிய தகவல்
எண்ணூரில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து நச்சு வாயு கசிவுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிப்பு என்ன..?
சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர் நேஷனல் தொழிற்சாலையில் இருந்து கடலுக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இக்கசிவினினால் கடல்வாழ் உயிரினங்கள் இறந்துள்ளன.
மேலும் அத்தொழிற்சாலையினை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் மீனவ கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்ப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்க்ளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வாழ தகுதியற்ற இடமா..?
எண்ணூர் அருகிலுள்ள சின்னக்குப்பம், பெரியக்குப்பம் பகுதியில் மிதமான அளவில் வாயுக்க்கசிவு ஏற்ப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறி வருவதாக பலரும் பதறி வருகின்றனர். இத்தொழிற்சாலையில் இருந்து 2 டன் அம்மொனியா வாயு கசிந்துள்ளதாகவும், ஆலையின் அருகே காற்றில் அம்மோனியத்தின் அளவு சராசரியை விட பன்மடங்கு உயர்ந்து இருந்தது என தமிழக மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாயுக்கசிவுக்கான காரணங்கள் குறித்து கண்டறியப்படும். தற்போது வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டதால் பொதுமக்கள் வீதி அடைய வேண்டாம். உரிய விசாரணை நடைபெற்று வாயுக் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இத்தொழிற்சாலையினை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆய்வுக்குழு அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பயாம் தாமாக முன்வந்து விசாரணையை வரும் ஜன.2-ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.