என்ஜாயி எஞ்சாமி பாடல் கலைஞர் மரணம்! பாடகர் உருக்கம்!
என்ஜாயி எஞ்சாமி பாடலில் நடனமாடும் நாட்டுப்புற பாடகி பாக்கியம்மா இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், அறிவு மற்று தீ-யின் குரலில் வெளியான என்ஜாயி எஞ்சாமி பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றது.

உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள இப்பாடல் யூடியூப்பில் இதுவரை 276 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் புகழ்பெற்ற 'என்ஜாய் எஞ்சாமி' பாடலில் தோன்றிய பாடகர் பாக்கியம்மா காலமானார் என்ற சோகமான செய்தியை பாடகர் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், பாடகி பாக்கியம்மா, உயிரிழந்த பல உயிர்களுக்காக உங்கள் இதயத்தில் இருந்து நீங்கள் பாடியுள்ளீர்கள். இப்போது உங்கள் அகால இழப்புக்கான வார்த்தைகள் இல்லாமல் சிரமப்படுகிறேன் என்றும் கலைஞர் இறக்கக்கூடும், ஆனால் அவர்களுடைய கலை எப்போதும் நம் இதயத்தில் நிலைத்திருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.