ஒரே நாளில் 506 ரன்கள் குவித்து இங்கிலாந்து புதிய உலகசாதனை

By Irumporai 2 மாதங்கள் முன்

இங்கிலாந்து அணி 500 ரன்களுக்கு மேல் அடித்து மேலும் ஒரு உலகசாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்து அணி சாதனை :

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி, முதல் டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 506/4 ரன்கள் குவித்து .

ஆஸ்திரேலியாவின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 494/6 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

ஒரே நாளில் 506 ரன்கள் குவித்து இங்கிலாந்து புதிய உலகசாதனை | Engvspak Test England Scored 506 Run

நான்கு பேர் சதம்

இங்கிலாந்து அணியில் ஒரேநாளில் 4 பேர் சதமடித்துள்ளனர். சாக் கிராலி 122, பென் டக்கெட் 107, ஆலி போப் 108, மற்றும் ஹாரி ப்ரூக் 101 என ஒரே இன்னிங்சில் அதுவும் முதல் நாளிலேயே 4 பேர் சதமடித்துள்ளனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் குவித்துள்ளது. இன்று ஒரே நாளில் இங்கிலாந்து அணி பல சாதனைகளை படைத்துள்ளது, முதல் செசனில் இங்கிலாந்து 177 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.