“ஆட்டத்துக்கு நானும் வரலாமா?” - இந்திய அணிக்கு பீல்டிங் செய்ய வந்த ரசிகர்

Mohammed Siraj Virat Kohli INDvsENG
By Petchi Avudaiappan Aug 14, 2021 03:31 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்ததால் வீரர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து-இந்தியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுலின் அபார சதத்தால் இந்திய அணி 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட் சதத்தால் வலுவான ஸ்கோரை எட்டியுள்ளது. இந்த அணி 100 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இன்று இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது மைதானத்தில் திடீரென ரசிகர் ஒருவர் நுழைந்தார். இந்திய அணியின் ஜெர்சி அணிந்துக் கொண்ட அவரிடம் மைதான ஊழியர்கள் யார் என கேட்க அவர் இந்திய அணியின் ஜெர்சியை கைக்காட்டி பீல்டிங் செய்ய உள்ளதாக கூறினார்.

அவரை மைதான ஊழியர்கள் விடாப்பிடியாக அழைத்து சென்றனர். இதனால் மைதானத்தில் இருந்த வீரர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.