இங்கிலாந்து தான் ஜெயிக்கும்... அடித்து சொல்லும் இந்திய முன்னாள் வீரர்

By Fathima Aug 16, 2021 09:35 AM GMT
Report

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தான் வெற்றி பெறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் நடந்து வருகிறது.

இன்று 5ம் நாள் ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, இந்நிலையில் இங்கிலாந்து தான் வெற்றி பெறும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிப் பெறும்.

இதனை சொன்னதற்காக என்னை கொன்றாலும் பரவாயில்லை. எனக்கு இங்கிலாந்துதான் வெற்றிப் பெறும் என்று தோன்றுகிறது.

கடைசி நாளான இன்று ஆடுகளத்தில் ஏற்கெனவே மாறுதல்கள் தெரிந்துவிட்டது. பந்தின் பவுன்ஸ் அவ்வப்போது மாறுகிறது. ஆடுகளம் மிகவும் மந்தமாகிவிட்டது. அதனால் 6 விக்கெட் இழந்த பின்பு இந்தியா பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என தெரிவித்துள்ளார்.