இங்கிலாந்திற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி - 191 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி

england vs india 4th test match
By Anupriyamkumaresan Sep 03, 2021 05:42 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 192 ஆட்டம் இழந்தது. ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து இருக்கிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்கின்றன.

இங்கிலாந்திற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி - 191 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி | England Vs India 4 Test Match India Loss 191 Runs

ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது இந்த நிலையில், 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் முக்கிய வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை ரோகித் சர்மா 11 ரன்கள் மற்றும் லோகேஷ் ராகுல் 17 ரன்கள், புஜாரா 4 ரன்கள் என்று அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

இங்கிலாந்திற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி - 191 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி | England Vs India 4 Test Match India Loss 191 Runs

அதன்பின்னர் அணியின் கேப்டன் விராட் கோலி, ரவீந்தர் ஜடேஜா உள்ளிட்ட இருவரும் மிக நிதானமாக விளையாடி ரன் சேர்க்க தொடங்கினார்கள்.

கடைசியில் முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்ட நேர இறுதியில் மலான் 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இந்திய அணியின் சார்பாக தூம் 2 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் எடுத்திருக்கிறார்கள்.