தானாக சென்று இங்கிலாந்து அணியின் வலையில் சிக்கிய வங்கதேசம் - அலேக்காக தூக்கிய இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச அணியும், இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன. அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக கெத்தாக பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணிக்கு பேட்டிங்கில் பெரும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
இதன்பின் வந்த முஸ்தபிகுர் ரஹீம் (29) நசும் அஹமத் (19*) ஆகியோரை தவிர மற்றவர்கள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியதால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி வெறும் 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக தைமல் மில்ஸ் 3 விக்கெட்டுகளையும், மொய்ன் அலி மற்றும் லிவிங்ஸ்டன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
