2 மாதமாக தாடியை வளரவிட்டு முகச்சவரம் செய்து கொண்ட இங்கிலாந்து பெண்...!
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2 மாதமாக தாடியை வளரவிட்டு தற்போது முகச்சவரம் செய்து கொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாடியை வளரவிட்டு முகச்சவரம் செய்த பெண்
இங்கிலாந்தைச் சேர்ந்த அனெட் என்ற பெண்ணுக்கு polycystic ovary syndrome எனப்படும் ஹார்மோன் தொடர்பான நோய் ஏற்பட்டுள்ளது. இதனால், அவருடைய முகத்தில் ஆண்களுக்கு எப்படி தாடி, மீசை வளருமோ அதுபோல் அவருடைய முகத்தில் வளர்ந்துள்ளது.
இதனையடுத்து, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 2 மாதமாக தாடியை அவர் வளரவிட்டுள்ளார். தாடியும், மீசையும் நன்கு வளர்ந்த பிறகு தற்போது, அவர் முகச்சவரம் செய்து கொண்டுள்ளார்.
தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்த இவர் செய்த முகச்சவரம் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.