ஐபிஎல் தொடருக்கு விழுந்த அடி: முக்கிய வீரர்கள் விலகல்

IPL2021 chriswoakes jonnybairstow
By Petchi Avudaiappan Sep 11, 2021 08:41 PM GMT
Report

2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் சிலர் பங்கு கொள்ள மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் நேற்று முன்தினம் முடிவு செய்தது. கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 17 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 2 ஆம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்நிலையில் இரண்டாவது பாதி ஐபிஎல் தொடரில் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய மூன்று வீரர்களும் பங்கு கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் பங்கு கொள்ளாமல் நிறுத்திக் கொண்டது தான் என்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.