யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் இத்தாலி - இங்கிலாந்து மோதல்

Euro Cup 2021
By Petchi Avudaiappan Jul 08, 2021 01:07 PM GMT
Report

 யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இத்தாலி - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

லண்டனில் உள்ள வெம்பிளி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இத்தாலியை இங்கிலாந்து சந்திக்கிறது. சர்வதேச கால்பந்து தொடர் ஒன்றில் இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது 55 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறை.

இதற்கிடையே தங்கள் அணியின் வெற்றியை இங்கிலாந்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.