இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி நாட்டிங்காமில் தொடங்க உள்ளது.
இதில் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் , ஆபாச ட்விட்டரில் ஆபாசமாக பதிவிட்ட சர்ச்சையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன், 5 ஆண்டுகளுக்கு பிறகு தொடக்க ஆட்டக்காரர் ஹசீப் ஹமீது ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேசமயம் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம் பெறவில்லை.
இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, சாம் கர்ரன், ஹசீப் ஹமீது, டேன் லாரன்ஸ், ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், டாம் சிப்லி, மார்க்வுட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.