எங்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது- ஜார்வோ குறித்து பேசிய இங்கிலாந்து வீரர்: ஷாக்கான ரசிகர்கள்
இந்தியா இங்கிலாந்து இடையேயான கடந்து இரண்டு போட்டிகளின் போதும் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஜார்வோ, ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியிலும் களத்திற்குள் புகுந்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து இங்கிலாந்து அணியின் ஓலி போப், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. மூன்றாவது போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிடையாது நாலாவது போட்டி ஓவல் மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு போட்டிகளின் போது திடீரென இந்திய அணியின் ஜெர்சியுடன் களத்திற்குள் புகுந்து காமெடி செய்த ஜார்வோ என்னும் ரசிகரின் காமெடிதனத்தை இந்திய ரசிகர்களும் விரும்பினர்.
ஆனால் கூடுவே களத்தில் விளையாடும் வீரர்களுக்கான பாதுகாப்பையும் பலர் கேள்விக்குள்ளாக்கினர். இவருடைய அத்துமீறலால் இவரை லீட்ஸ் மைதானம் இனி உள்ளே வரவிடாமல் தடை செய்துவிட்டது அடுத்த போட்டிகளில் இதே தவறை இவர் செய்யமாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில் ஓவல் மைதானத்தில் இவர் உள்ளே நுழைந்தது மிகப் பெரும் சர்ச்சையாக மாறிவிட்டது,
இந்நிலையில் ஜார்வோ குறித்து இங்கிலாந்து அணியின் ஓலி போப் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, அந்த நபர் எப்படி மைதானத்திற்குள் வந்தார் என்பது தெரியவில்லை.
ஆனால் அவரால் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது, குறிப்பாக நாங்கள் அனைவரும் பயோ பபிளில் உள்ளோம், இவரால் அதற்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறினார்.
மேலும் ஜார்வோவின் வருகைக்குப் பிறகு பேட்டிங் ப்லோ மாறிவிட்டதா என்ற கேள்வி ஓலி போப்பிடம் கேட்கப்பட்டது, அதற்கு பதில் அளித்த அவர்,அப்படியெல்லாம் போவதற்கு வாய்ப்பே கிடையாது, நான் சிறப்பாக தான் விளையாடினேன் ஆனால் இந்திய அணி பந்து வீச்சாளர்களை சிறந்த முறையில் பந்து வீசியதால் தான் எனது விக்கெட்டை இழந்தேன் என்று தெரிவித்தார்.
தற்பொழுது ஜார்வோ, இங்கிலாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வீரர்களை தாக்க முற்பட்டாரா??. என்ற விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.