இங்கிலாந்து வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று...!

Covid19 England cricket team
By Petchi Avudaiappan Jul 06, 2021 03:38 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் 3 பேர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜூலை 8 ஆம் தேதி தொடங்க உள்ளது. 

இதனிடையே இங்கிலாந்து அணியினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் அணி நிர்வாக உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 7 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதேசமயம் போட்டித்தொடர் திட்டமிட்டபடி நிச்சயம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.