புதினின் ரகசிய காதலிக்கு , புதிய தடை விதித்த இங்கிலாந்து

Vladimir Putin
By Irumporai May 14, 2022 03:37 AM GMT
Report

ரஷ்ய அதிபர் புதினின் ரகசியகாதலி மீது புதிய தடை தொடர்வதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2 மாதங்களை கடந்து கடும் போரானது நடைபெற்றுவருகிறது, போரை நிறுத்த பல நாடுகள் தரப்பில் வலியுறுத்திய நிலையில், தோல்வியில் முடிந்துள்ளது. அதே சமயம், போரை நிறுத்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன .

அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதினின் ரகசிய காதலிக்கு தடைவித்தித்துள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று ஓய்வு பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா (வயது 38), ரஷிய அதிபர் புதினின் மனைவி என கூறப்படுகிறது.

மேலும் , புதினின் 4 குழந்தைகளுக்குஇவர்தான் தாய் என்றும் கூறப்படுகிறது. எனினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் புதின் இதுவரை வெளியிடவில்லை.

இந்த சூழலில், உக்ரைன் மீது போர் தொடுக்கும் முன்பு, தனது ரகசிய காதலி கபேவாவை, சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் வசமுள்ள பகுதிக்கு புதின் அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது.

அலினாவை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றும்படி கோரிக்கைகள் வலுத்தன. இந்த சூழலில், புதினின் ரகசிய காதலியான அலினா மற்றும் புதினின் முன்னாள் மனைவியான லுட்மிலா ஆக்ரெத்னயா ஆகியோருக்கு எதிராக இங்கிலாந்து புதிய தடைகளை விதித்து உள்ளது.

இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி , புதினின் குடும்பம், பால்யபருவ நண்பர்கள் மற்றும் புதின் ஆட்சியில் பலன் பெற்ற நபர்கள், பதிலுக்கு புதினின் வாழ்க்கை முறைக்கு ஆதரவாக இருந்தவர்கள் ஆகியோர் மீது புதிய தடைகள் விதிக்கப்படுவதாக கூறியுள்ளது.

புதினுக்கு உதவி செய்யும் அனைவர் மீதும் இங்கிலாந்து தொடர்ந்து தடைகளை விதிக்கும் என டிரஸ் கூறியுள்ளார். இதன்படி, ஓய்வு பெற்ற ஒலிம்பிக் வீராங்கனையான அலினாவுக்கு எதிராக இந்த தடை தொடரும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.