எங்கள் தோல்விக்கு இவரே காரணம்... வேதனையில் புலம்பும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்
4வது டெஸ்ட் போட்டியில் நாங்கள் டெஸ்ட் போட்டியில் தோற்க இந்த இந்திய அணி வீரர் தான் காரணம் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணி வீழ்த்திவிடலாம் அல்லது போட்டியை டிராவாவது செய்து விடலாம் என்ற எண்ணத்தில் களமிறங்கி பரிதாபமாக தோல்வியடைந்தது.
இந்நிலையில் இந்த தோல்வி தங்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்துள்ளதாகவும், இந்திய பந்துவீச்சாளர்கள் எங்கள் வெற்றியை பறித்துவிட்டார்கள் என்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். மேலும் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சே போட்டியில் திருப்புமுனையாக அமைந்துவிட்டது.
அவர் தான் எங்கள் தோல்விக்கெல்லாம் காரணம் எனவும் ரூட் கூறியுள்ளார்.
எங்கே தவறு நடந்தது என கண்டறிந்து தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.எனவே அடுத்த போட்டியில் நிச்சயம் சிறப்பாக விளையாடுவோம் என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.