“வெக்கமா இல்லையா?” - ஜோ ரூட்டை கழுவி ஊற்றும் இங்கிலாந்து ஊடகங்கள்
இந்தியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியதை அந்நாட்டு ஊடகங்கள் காட்டமான விமர்சனம் செய்துள்ளன.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணியின் கடைசி கட்ட பவுலர்கள் ஷமியும் பும்ராவும் 20 ஓவர்கள் ஆடிய பிட்சில் ஒட்டுமொத்த இங்கிலாந்தும் 60 ஓவர்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் 120 ரன்களுக்கு சுருண்டது. இதனைக் குறிப்பிட்டு அந்நாட்டு ஊடகங்கள் கேப்டன் ஜோ ரூட் உள்ளிட்ட அனைத்து வீரர்களையும் கிழித்தெறிந்துள்ளன.
டெலிகிராப் பத்திரிக்கையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மூளையிழந்து செயல்பட்டாலும் உணர்ச்சிவயப்பட்டாலும் கேப்டன் என்பவர் நிதானத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதேபோல் வைடன் பத்திரிகை மொயின் அலி பந்தில் பும்ராவுக்கு ரூட் கேட்சை விட்டார். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தியதால் கேட்ச்சை விட்டதாக சாடியுள்ளது. மேலும் எதிரணியுடன் ஒன்றிரண்டு வார்த்தைப் பரிமாற்றங்கள் என்பது வேறு, 2 டெய்ல் எண்டர்கள் உங்களை முட்டாளாக்கியது வேறு எனவும் விமர்சித்துள்ளது.
இங்கிலாந்தை கோமாளியாக்கி ஷமி, பும்ரா அங்கு நன்றாக மகிழ்ந்ததாக வர்ணனையாளர் டேவிட் லாய்ட் கூறியுள்ளார்.